சுமார் 3 கிலோ தங்கத்துடன் 9 பேர் கைது

சுமார் மூன்று கிலோ தங்க நகைகள், மற்றும் தங்க பிஸ்கட்டுகளுடன் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (19) பிற்பகல் துபாயிலிருந்து 4.20 மணியளவில் வந்த UL 303 மற்றும் சிங்கப்பூரில் இருந்து பிற்பகல் 4.50 மணியளவில் வந்த EK 654 ஆகிய இரு விமானங்களிலிருந்தும் கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு வந்த குறித்த சந்தேகநபர்கள் 9 பேரிடமிருந்தும், சட்டவிரோதமான முறையில் கொண்டு வரப்பட்ட தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக சுங்க திணைக்கள பதில் பேச்சாளர் விபுல மினுவன்பிட்டிய தெரிவித்தார்.
சுமார் 3 கிலோ தங்கத்துடன் 9 பேர் கைது சுமார் 3 கிலோ தங்கத்துடன் 9 பேர் கைது Reviewed by Ceylon Muslim on February 20, 2019 Rating: 5