பெயர் பட்டியலை கடிதம் மூலம் கோரியுள்ள சபாநாயகர்

Ceylon Muslim
0 minute read
கொக்கைன் உள்ளிட்ட போதைப் பொருள்களைப் பயன்படுத்தும்  நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் 24 பேர் நாடாளுமன்றத்தில் இருப்பார்களானால் அவர்களின் பெயர்களை கடிதம் மூலம் அறிவிக்குமாறு, சபாநாயகர் கரு ஜயசூரிய இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விடயம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தொலைபேசியில் சபாநாயகரிடம் அறிவித்த போதே, சபாநாயகர்  தொலைபேசியில் அறிவிக்காமல் கடிதம் மூலம் கோரியுள்ளார்.
அவ்வாறு கடிதம் மூலம் முறைபாடு கிடைத்தால் கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடி  முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுக்க தயாராகவிருப்பதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது
To Top