அட்டாளைச்சேனையில் இருந்து சென்ற பஸ் விபத்து :30பேர் வைத்தியசாலையில்


அட்டாளைச்சேனை கல்வியியல் கல்லூரியில் இருந்து புறப்பட்ட பஸ்களில் ஒன்று பகலகடுகண்ணாவை பிரதேசத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்து இரவு 10 மணியலவில் ஏற்பட்டுள்ளது.

சுற்றுலா சென்ற 4 பஸ்களில் ஒன்றே முந்திச் செல்ல முற்படும் போதே சறிந்து இவ்வாரு விபத்துக்குள்ளாகியது. குறித்த பஸ்வண்டியில் 54 ஆசிரியர் பயிற்சி கலாசாலையை சேர்ந்த பயிற்சி ஆசிரியர்கள் குழாம் பயணித்ததாகவும் விபத்துக்குள்ளான 30 ற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மாவனெல்லை மற்றும்பேராதெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்னது.

விபத்து குறித்து மாவனெல்ல போலீசார் மேலதிக விசாரனைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

3 வரின் நிலை கவலைக்கிடம் என தெரியவருகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...