பதற்ற நிலையால், வடமேல் மாகாண நிறுவனங்கள், பாடசாலைகளுக்கு பூட்டு..!பாடசாலைகளுக்கு பூட்டு

வட மேல் மாகாணத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் இன்று (14ஆம் திகதி) மூடப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், நாட்டின் ஏனைய பாடசாலைகள் வழமை போன்று இயங்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். வட மேல் மாகாணத்தில் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அரச நிறுவனங்கள் மூடல்.

தொழிலுக்கு செல்வதற்கு அரச அதிகாரிகள் எதிர்நோக்கியுள்ள சிக்கல் மற்றும் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு மக்கள் வருகை தராமை ஆகியவற்றை கருத்தில்கொண்டு அரச அதிகாரிகளுக்கு விடுமுறை வழங்குவதற்குத் தீர்மானித்ததாகவும் வட மேல் மாகாண ஆளுநர் கூறியுள்ளார்.

வட மேல் மாகாணத்தில் நிலவும் பாதுகாப்பு நிலைமை தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.இதேவேளை, வட மேல் மாகாணத்தில் நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருந்த அனைத்து அரச நிகழ்வுகளும் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக வட மேல் மாகாண ஆளுநர் பேசல ஜயரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.
பதற்ற நிலையால், வடமேல் மாகாண நிறுவனங்கள், பாடசாலைகளுக்கு பூட்டு..! பதற்ற நிலையால், வடமேல் மாகாண நிறுவனங்கள், பாடசாலைகளுக்கு பூட்டு..!  Reviewed by NEWS on May 14, 2019 Rating: 5