சந்திரிகாவின் வருகைக்கு எதிர்ப்பு.!

NEWS
0 minute read
0

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையத்தில் நேற்று (07) இடம்பெறவிருந்த கட்சி அமைப்பாளர்களுடனான கலந்துரையாடல் குழப்ப நிலை காரணமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அழைப்பு விடுக்கப்படாத நிலையில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, அங்கு வந்தமையால் அமைதியின்மை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவிருந்த நிலையில், சந்திரிகாவின் வருகையால் ஏற்பட்ட குழப்பத்தை அடுத்து, அவர் அங்கு வரவில்லை என்று கூறப்படுகின்றது.

சந்திரிகாவின் வருகைக்கு எதிர்ப்பு வெளியிட்டு அமைப்பாளர்கள் அங்கிருந்து சென்றதாகவும், இறுதியில் சந்திரிகாவும் அங்கிருந்து சென்றுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Tags

Post a Comment

0 Comments

Post a Comment (0)