நாடாளுமன்றை மீண்டும் கூட்டும் எண்ணமில்லை: ஜனாதிபதி.


கொரோனா சூழ்நிலையில் நாடு முடங்கிப் போயுள்ள நிலையில் நாடாளுமன்றம் மீண்டும் செயற்படும் தேவையிருப்பதாக எதிர்க்கட்சியினர் தெரிவித்து வருகின்ற போதும், அதற்கான எதுவித எண்ணமும் இல்லையென திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ச.தற்போதைய சூழ்நிலை கட்டுப்பாட்டுக்குள் வந்ததும் விரைவாக தேர்தலை நடாத்துவதே தனது திட்டம் எனவும் எக்காரணம் கொண்டும் நாடாளுமன்றம் மீண்டும் கூட்டப்பட மாட்டாது எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

நேற்றைய தினம் சஜித் - கோட்டா தரப்புகளுக்கிடையே இடம்பெற்ற சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்றை மீண்டும் கூட்டும் எண்ணமில்லை: ஜனாதிபதி. நாடாளுமன்றை மீண்டும் கூட்டும் எண்ணமில்லை: ஜனாதிபதி. Reviewed by ADMIN on April 07, 2020 Rating: 5