அடுத்த கட்டங்களை நாங்கள் தான் கடந்தாக வேண்டும்...முடக்கப்பட்ட வீதிகள்


அடைக்கப்பட்ட மக்கள்..


விடுக்கப்பட்ட ஊரடங்கு


தடுக்கப்பட்ட சுதந்திரம்..


எடுக்கப்பட்ட திட்டங்களும்


கொடுக்கப்பட்ட நிவாரணங்களும்...


ஆறுதல் மட்டுமே..


அடுத்த கட்டங்களை 


நாங்கள் தான் 


கடந்தாக வேண்டும்... 


உள்ளார்ந்த உற்சாகத்தோடு


உயர்ந்துகொண்டிருந்தோம்


இந்த கணங்கள் எங்களை உடைத்துப்போட்தென்றோ..


உயர்ந்த எண்ணங்களோடு


முயன்றுகொண்டுதானிருந்தோம்


இந்த ரணங்கள் எங்களை 


முடக்கிப்போட்டதென்றோ


முடிவுகட்டிவிட வேண்டாம்..


இடைவெளிகள் - ஓய்வுகள்.


பெறுமதி வாய்ந்தவை..


அறிவுகளை பட்டை தீட்டவும்


தவறுகளை தட்டிக்கழிக்கவும்


கிடைத்த வாய்ப்புகள் இடைவெளிகள்.. 


புதிய வழிமுறைகளை கையாளவும்


பழைய சகதிகளை


சலவை செய்யவும்


கிடைத்த சந்தர்ப்பம்


ஓய்வுகள்.


உலகின் வெற்றிகரமான மனிதர்கள் நிறையப்பேர் ஏதோ ஒரு வகையில் இது போன்ற இடைவெளிகளை சந்தித்திருக்கிறார்கள்..


அவர்களின் வியாபார சாம்ராஜ்யமே சரித்துவிட்டதென்று பத்திரிகைகள் பகிரங்கமாக எழுதும் அளவிற்கு அந்த இடைவெளாகளில் உடைந்து தரைமட்டமாக்கப்பட்டவர்கள்...


மீண்டு எழுந்து மீண்டும் வளர்ந்து முன்பை விட பல நூறுமடங்கு தங்கள் வியாபாரங்களை கட்டி எழுப்பி இடைவெளிகளுக்கு பெறுமதி சேர்த்த உதாரண புருஷர்களாக சரித்திரத்தில் இடம் பிடித்திருக்கிறார்கள்..


முடிந்து போன விடயங்களோ.. கடந்துபோன தோல்விகளோ..


முன்னால் இருக்கும் வெற்றிகளை எந்த விதத்திலும் தடுத்துவிடாது..


மூலதனம் இல்லாமையோ.. உங்களுக்கான உதவிகள் (Supports) இடைநிறுத்தப்பட்டமையோ எந்த விதத்திலும் உங்கள் எதிர்கால வெற்றிகளை இல்லாமலாக்கி விடாது..


இது நிச்சயம். 


புதிய உலகில்


புதிய மனிதனாக


புதிய சிந்தனைகளோடு


காலடி எடுத்துவைப்போம்..


நம்பிக்கையும் உறுதியும் ஒருகாலமும் வீண் போகாது..


வெற்றிகள் நமதே


ஈத் முபாரக்..


🤝🏻🤝🏻💐💐


கம்மல்துறை எம்.றிஸ்வான்
அடுத்த கட்டங்களை நாங்கள் தான் கடந்தாக வேண்டும்...  அடுத்த கட்டங்களை நாங்கள் தான் கடந்தாக வேண்டும்... Reviewed by ADMIN on May 25, 2020 Rating: 5