தபால் மூல வாக்களிப்பிற்காக ஜூலை 13 ஆம் திகதி விஷேட தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
பொதுச் சுகாதார பரிசோதகர்கள், குடும்ப நல சுகாதார அதிகாரி மற்றும் சுகாதார அமைச்சின் ஊழியர்கள் வாக்களிப்பதற்காகவே இவ்வாறு குறித்த தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.