சமையல் எரிவாயு விநியோகம் தொடர்பில் லிட்ரோ கேஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

சமையல் எரிவாயுக்கான தட்டுப்பாடு எதிர்வரும் 5 நாட்களுக்குள் நீங்குமென லிட்ரோ கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.


அரசாங்கம் மற்றும் மத்திய வங்கி என்பனவற்றின் தலையீட்டுடன், அவசியமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் ஜானக்க பத்திரண தெரிவித்துள்ளார்.


இன்னும் 05 நாட்களுக்குள், அனைத்து விற்பனை நிலையங்களுக்கும் அந்தத் தொகையை வழங்கக்கூடியதாக இருக்கும்.


இரண்டு நாட்களுக்கு ஒருமுறை எரிவாயு கப்பல் நாட்டை வந்தடைகிறது. எதிர்காலத்திலும் இந்த நிலைமை நீடிக்கும்.


எனவே, சமையல் எரிவாயு கிடைப்பதில் தற்போது எவ்வித குறைப்பாடும் இல்லையென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சமையல் எரிவாயு விநியோகம் தொடர்பில் லிட்ரோ கேஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு சமையல் எரிவாயு விநியோகம் தொடர்பில் லிட்ரோ கேஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு Reviewed by ADMIN on November 20, 2021 Rating: 5