Headlines
Loading...
இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிரான பயங்கரவாத தாக்குதல்: அமெரிக்காவில் போராட்டம்

இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிரான பயங்கரவாத தாக்குதல்: அமெரிக்காவில் போராட்டம்



அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்
இந்தியாவில் மாட்டுக்கறியை வைத்து அரசியல் செய்வதோடு, இந்துத்துவாவை புகுத்தி சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு சர்வதேச அளவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

மாட்டுக்கறிக்காக அஹ்லாக் முதல் சிறுவன் ஜுனைது வரை இந்தியாவில் நடத்தப்பட்ட பயங்கரவாதிகளின் கொலைவெறி தாக்குதலுக்கு 'NOT IN MYNAME' என்ற பெயரில் நாடெங்கும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த போராட்டம் இந்தியாவை தாண்டி சர்வதேச அளவிலும் எதிரொலித்துள்ளது. The Alliance for Justice and Accountability (AJA), an umbrella coalition of progressive organizations என்ற அமைப்பு அமெரிக்கா முழுவதும் 'NOT IN MYNAME'போராட்டத்தை முன்னெடுத்து நடத்தி வருகிறது. 

போராட்டக்காரர்கள், இந்துத்துவாவுக்கு எதிராகவும், முஸ்லிம்கள், தலித்துகளுக்கு எதிரான தாக்குதலை கண்டித்தும், மாட்டுக்கறி தடை உள்ளிட்டவைகளை எதிர்த்தும் பதாகைகளை ஏந்தி போராடி வருகின்ற்னர்.
வாஷிங்டனில் இந்த போராட்டம் நடத்தப்பட்டுள்ள நிலையில் வரும் ஜூலை 23 ஆம் தேதி நியூயார்க் ந்கரில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

0 Comments: