சப்னி அஹமட்
கடந்த 05வருடங்களாக பட்டங்களை முடித்து விட்டு எவ்விதமான தொழில்களிலும் ஈடுபடாமல் கஷ்டப்படும் பட்டதாரிகளுக்காக அரசியல் வாதிகள் அதிகளவிலான கரிசனை செலுத்தி வருகின்றோம் எனவும் எதிர்வரும் 26ஆம் திகதி இடம்பெற்ற கிழக்கு மாகாண சபையின் அமைச்சரவை தீர்மானத்தில் இது தொடர்பில் விசேட தீர்மானம் ஒன்றையும் எடுக்கவுள்ளோம் எனவும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் தங்களுக்கு நிரந்திர தீர்வினைக்கோரி இன்று (27) காரைதீவு முற்சந்தியில் காலை முதல் தங்களது போராட்டங்களை மேற்கொண்டனர். குறித்த இடத்திற்கு விரைந்த அமைச்சர் அங்கு உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கருத்து கூறுகையில்;
கிழக்கு மாகாணத்தில் உள்ள பட்டதாரிகளுக்கு தீர்வுகள் மிக விரைவில் நல்லாட்சி அரசினால் வழங்கப்படும் என்ற நம்பிக்கை இருந்தாலும் நல்லாட்சி அரசு இந்த பட்டதாரிகளுக்கு தீர்வு வழங்க எடுத்த நடவடிக்கை போதாமையாக உள்ளது இதறகாக அனைத்து மாகாணத்தை சேர்ந்தவர்களும் குறிப்பாக அரசியல் பிரமுகர்கள் பலவிதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். பட்டதாரிகளுக் கு எவ்வாறன முறையிலாவது நியமனம்ங்களை வழங்க வேண்டும் என்ற தொணியிலையே நாங்களும் எமது மாகாண சபை ஊடாக பலவிதமான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றோம். அதிலும் குறிப்பாக பட்டதாரிகளுக்கு பரீட்சை என்று இல்லாமல் அவர்களுக்கு பல விதமான தொழில் வாய்ப்புக்களில் உள்வாங்குவதற்கு நாம் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம்.
எதிர்வரும் 26ஆம் திகதி கிழக்குமாகாணத்தின் அமைச்சரவை கூடுகின்றது அதன் போது அங்கு தீர்மானங்களை மேற்கொள்ளவுள்ளதுடன், பலவருடங்கள் கற்று இன்று பதவிகள் இலலமல் கஷ்டப்படும் உங்களுடன் அரசியல் வாதிகள் அதி கூடிய கரிசனைகளை செலுத்துவோம். இது தொடர்பில் நாம் சிறந்து ஓர் தீர்வினை பெற்றுக்கொள்ளும் முயற்சியில் நாம் செயற்படுவதுடன் . தங்களின் பட்டங்களை நிறைவு செய்து வெளியாகின்ற பட்டதாரிகளுக்கு உரிய வருடத்தில் அவர்களுக்குரிய நியமனங்களை வழங்கியிருந்தால் இவ்வாறான பிரச்சினைகள் இன்று எமக்கு ஏற்பட்டிரிக்காது. அது மாத்திரமல்லாமல் தற்போது பட்டதாரிகளை உள்ளீர்த்தல் பொறிமுறையில் ஏற்பட்டுள்ள 40 வயதாகவுள்ள வயதெல்லையை 45 வயதுவரை மாற்றம் செய்ய வேண்டிய பிரச்சினைகளும் ஏற்பட்டிரிக்காது எனவும் தெரிவித்தார்.
மேலும், குறித்த பட்டதாரிகளுக்கு அரச தொழில் வாய்ப்பொன்றை பெற்றுக்கொடுப்பதற்கு நாம் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரிடம் இவர்களின் நிலமை தொடர்பில் முன் வைத்துள்ளோம். விரைவில் இவர்களுக்கான தீர்வினைபெற்றுக்கொடுக்கவுள்ளோம் எனவும் அங்கு தெரிவித்தார்.
