கிண்ணியாவில் தற்போது தீவிரமடைந்துள்ள டெங்கு நோயை கட்டுபடுத்தும் நோக்கில் டெங்கு நோயை காவுகின்ற நுளம்புகளையும் அதன் குடம்பிகளின் பெருக்கத்தை தடுப்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தலைமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை சிரமதானம் நடைபெற்றது.
இச்சிரமதானத்தில் கிண்ணியா மட்டுமல்லாது தோப்பூர் தம்பலகாமம் மூதூர் என பல பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கலந்துகொண்டு சுற்றுப்புறச் சூழலை சுத்தமாக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.

