10 வருடங்களுக்கு முன்பு பலாத்காரமாக இந்த இடத்தில் குப்பைகள் கொண்டு வந்துகொட்டப்படுவதால் எமது பிரதேச மக்கள் பாரிய சுற்றாடல் பிரச்சினைகளுக்கு முகங்கொடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் மரிக்கார் தெரிவித்தார்.
மீதொட்டுமுல்ல பிரதேசத்தில் கொழும்பு நகரில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்புடுவதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர் மரிக்கார் தலைமையிலான குழுவினர் இன்று காலை அவிஸாவெல-கொழும்பு வுPதியினை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போதே மரிக்கார் இதனைத் தெரிவித்தார்.
குறித்த குப்பைகளினால் சுற்றாடல்,கல்வி,சுகாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மரிக்கார் சுட்டிக்காட்டினார்.
கடந்த தேர்தலின் போது இந்தப் பிரச்சினை தொடர்பாக பிரதமரும்,ஜனாதிபதியும் இதுதொடர்பில் தீர்வினை வழங்குவதாக தமக்கு வாக்குறுதி வழங்கியதாகவும்,தாமும் அதனை நம்பி மக்களுக்கு வாக்குறுதி வழங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
