ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் செயலாளர் நாயகம் ஹசன் அலி, முக்கிய அறிவிப்பொன்றை நாளை (03) விடுக்கத் தீர்மானித்துள்ளதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது. அவர் தலைமையில், நிந்தவூர் பெரிய பள்ளிவாசலில் நேற்றிரவு இடம்பெற்ற கூட்டத்தின் போதே இந்த விவகாரம் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
நேற்றிரவு 7:45க்கு ஆரம்பமான இக்கூட்டத்தின் இறுதியில் எடுக்கப்பட்ட இறுதி முடிவு தொடர்பில் எவ்விதமான தகவல்களும் வெளியாகவில்லை. இதேவேளை, புதியக் கட்சியொன்றை பதிவு செய்வதற்கான இறுதித் திகதி, கடந்த மாதம் 29ஆம் திகதியுடன் நிறைவடைந்தமையால், அவர் தலைமையில் அல்லது அவருடைய ஆலோசனையின் பேரில் புதிய கட்சியொன்று பதிவு செய்வதற்கான சாத்தியக்கூறுகள் இல்லையென்று தெரியவந்துள்ளது. எது எவ்வாறோ, முஸ்லிம்களின் உரிமைகளுக்காக வெகுஜனப் போராட்டங்களை நடத்துவதற்குத் தீர்மானித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. (த.மி)
