வடக்கு முஸ்லிம்களின் அவலத்தை ஐ.நாவில் பேசுங்கள்; அய்யுப் அஸ்மின்



வட மாகாண முஸ்­லிம்­களின் விவ­கா­ரங்கள் 2017 மார்ச் ஐ.நா மனித உரிமை ஆணைக்­கு­ழுவின் கூட்­டத்­தொ­டரில் ‍பேசப்­ப­ட­வேண்டும் என வட மாகாண சபை உறுப்­பினர்  அய்யூப் அஸ்மின் தெரி­வித்­துள்ளர்.  ஐ.நா மனித உரிமை மாநாட்­டிலே வடக்கு முஸ்­லிம்­களும் பங்­கேற்றல் தொடர்பான சாத்­தி­யப்­பா­டுகள் குறித்து நேற்று வட மாகாண முஸ்லிம் சமூகப் பிர­தி­நி­தி­க­ளுடன் இடம்­பெற்ற சந்­திப்­பின்­போதே இக்­க­ருத்­துக்­களை அவர் முன்­வைத்தார்.
அங்கு அவர் மேலும் தெரி­விக்­கையில்,இலங்கை அர­சாங்கம் சார்பில் வெளி­வி­வ­கார அமைச்சர் ஐ.நா மனித உரிமை ஆணைக்­கு­ழுவில் முன்­வைத்­தி­ருக்கும் கருத்­துக்­களை முழு­மை­யா­கவும், நிதா­ன­மா­கவும் கூர்ந்து அவ­தா­னித்தல் அவ­சி­ய­மாகும். ஏற்­கெ­னவே முன்­மொ­ழி­யப்­பட்ட தீர்­மா­னத்தை முழு­மை­யாக ஏற்­றுக்­கொண்டு அதிலே எவ்­வித மாற்­றங்­களும் ஏற்­ப­டாது. அதன் நோக்­கங்­களும், அதனை நோக்­கிய பய­ணங்­களும் மாறாது நிலைத்­தி­ருக்கும் என்று குறிப்­பிட்­டுள்­ள­மை­ வர­வேற்­கத்­தக்க விட­ய­மாகும்.
ஆனாலும் இலங்கை விவ­கா­ரத்தில் ஐ.நா. மனித உரிமை ஆணைக்­குழு உரிய விளை­வு­களை எதிர்­பார்ப்­ப­தாயின் அமைச்சர் குறிப்­பிட்ட விட­யங்­களை வேக­மாக அமு­லாக்­கு­வ­தற்­கான உத்­த­ர­வா­தங்­களைப் பெற்­றுக்­கொள்­வ­தோடு, கடு­மை­யான மேற்­பார்வை முறை­மை­யொன்றை அறி­முகம் செய்தல் அவ­சி­ய­மா­கின்­றது. பொது­வாக இலங்­கையின் நிலைப்­பா­டா­னது வர­வேற்­கத்­தக்­க­தா­கவும், நியா­யப்­பா­டு­களை உள்­ள­டக்­கி­ய­தா­கவும் இருக்­கின்ற அதே சந்­தர்ப்­பத்தில் இலங்கை அரசு மீண்­டு­மொ­ரு­த­டவை ஐ.நா. தீர்­மா­னத்தை தன்­மீது விதி­யாக்­கிக்­கொண்­டுள்­ளது என்­பதை உறு­தி­செய்­துள்­ளது.
ஜெனிவா மனித உரிமை மாநாட்­டி­னது இலங்­கை­தொ­டர்­பான தீர்­மா­னத்தை முஸ்லிம் மக்கள் பூதத்தைப் பார்ப்­ப­து­போன்றே பார்த்­தார்கள், அல்­லது அவ்­வாறு பார்ப்­ப­தற்கு நிர்ப்­பந்­திக்­கப்­பட்­டார்கள். எங்­க­ளு­டைய அர­சியல் தலை­மை­களும், சிவில் சமூ­கத்­த­லை­வர்­களும் ஜெனிவா தீர்­மானம் குறித்து சரி­யான விளக்­கங்­களை மக்­க­ளுக்கு வழங்­க­வில்லை. இதன்­கா­ர­ண­மாக அத்­தீர்­மா­னத்­திற்கும் முஸ்லிம் மக்­க­ளுக்கும் எவ்­வித தொடர்பும் இல்­லாத நிலை­யேற்­பட்­டி­ருக்­கின்­றது. 
அத்­தீர்­மா­னத்தை நாம் அறி­வு­பூர்­வ­மாக அணுகக் கட­மைப்­பட்­டி­ருக்­கின்றோம். அதில் இருக்­கின்ற சாதக பாத­கங்கள் குறித்து ஆராய்­வது எமது கட­மை­யாகும். அதே­போன்று அது­கு­றித்து ஒரு நடு­நி­லை­யான தீர்­மா­னத்தை மேற்­கொள்­வ­தற்கு முஸ்லிம் மக்கள் முன்­வ­ர­வேண்டும். அவ்­வாறு ஒரு தீர்­மா­னத்தை முன்­னி­றுத்தி அதன்­மூலம் மக்­க­ளுக்கும் நாட்­டுக்கும் கிடைக்­கக்­கூ­டிய நன்­மை­க­ளையும், பாதகங்­க­ளைங்­க­ளையும் அறிந்­து­கொண்டு செயற்­ப­ட­வேண்டும். இப்­போது ஒரு தீர்க்­க­மான கட்டம் எம்­முன்னால் ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. இதனை நாம் சாத­க­மாகப் பயன்­ப­டுத்­த­வேண்டும்.
இலங்கை அர­சாங்­கமும், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும் இது­வி­ட­யத்தில் சரி­யான நிலைப்­பா­டு­களை முன்­னெ­டுத்­தி­ருக்­கின்­றார்கள் என்றே எனக்குத் தோன்­று­கின்­றது. ஒரு சிலர் கால அவ­காசம் வழங்­கப்­ப­டக்­கூ­டாது என்று கருத்­துக்­களை முன்­வைக்­கின்­றார்கள். கால அவ­காசம் வழங்­கக்­ கூ­டாது என்றால் அடுத்­தது என்ன என்ற கேள்வி எழு­கின்­றது. ஐ.நா. மன்­றிலே கால அவ­காசம் வழங்­கா­தீர்கள் என்று சொல்­கின்­ற­வர்கள், ஐ.நா. அடுத்து என்ன செய்­ய­வேண்டும் என்­ப­தையும் குறிப்­பி­ட­வேண்டும். கால அவ­காசம் வழங்க வேண்டாம் என்று சொல்­கின்­ற­வர்கள் ஐ.நா. தீர்­மானம் நீர்த்­துப்­போ­வ­தற்கு வழி­செய்­கின்­றார்கள் என்றே அர்த்தம் கொள்­ள­வேண்­டி­யி­ருக்­கின்­றது.
இலங்கை முஸ்­லிம்­களும் ஐ.நா. தீர்­மானம் குறித்து சுயா­தீ­ன­மான ஒரு நிலைப்­பாட்­டினை மேற்­கொள்­ள­வேண்­டிய தேவை இருக்­கின்­றது. அதிலும் குறிப்­பாக வட­கி­ழக்கு முஸ்­லிம்கள் இது­வி­ட­யத்தில் ஒரு தீர்க்­க­மான முடிவை எடுக்­க­வேண்­டி­ய­வர்­க­ளாக இருக்­கின்றோம்.

இங்கு ஒன்­று­கூ­டி­யுள்ள வடக்கு முஸ்லிம்கள் தம்முடைய நிலைப்பாட்டினை முதலில் வெளிப்படுத்துவதன் மூலம், ஐ.நா. தீர்மான விடயத்தில் முஸ்லிம் சமூகம் தன்னுடைய நிலைப்பாட்டினை முன்வைப்பதற்கான ஒரு வழி பிறக்கும் என்றுதான் நான் கருதுகின்றேன். அதனடிப்படையில் வடக்கு முஸ்லிம் சிவில் சமூகம் எவ்விதமான பக்கச்சார்புமின்றி சுயாதீனமாக இதுவிடயத்தில் தன்னுடைய நிலைப்பாட்டினை வடிவமைத்து அதனை வெளியிடல் வேண்டும் என்ற முடிவை நான் வரவேற்கின்றேன். என்றும் குறிப்பிட்டார்.