இவர்தான் “சிங்க லே” அமைப்பின் புதிய தலைவர்



சேகு

அனுராதபுர பிரதேசத்தில் அமைந்துள்ள இரவு விடுதி ஒன்றின் உரிமையாளரான கராட்டி வசந்த என அழைக்கப்படும் வசந்த சொய்சாவை இரவு விடுதியின் உள்ளே நுழைந்து வெட்டிப் படுகொலை செய்தமை, மனிதப் படுகொலைகள், கப்பம் பெறுதல் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகம் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுடன் தொடர்புள்ளதாக சந்தேகிக்கப்படும் எஸ்.எப். லொக்கா எனப்படும் இரோன் ரணசிங்க ” சிங்க லே” அமைப்பின் புதிய தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எஸ்.எப். லொக்கா பல சந்தர்ப்பங்களில் மனிதப் படுகொலை குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் பிரபல பாதாள உலகக் குழு தலைவராகப் பெயர் பெற்றுள்ள எஸ்.எப். லொக்கா “சிங்க லே” அமைப்பின் புதிய தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளமை, இனவாதத்துடன் வன்முறையையும் இணைத்து, நாட்டில் இனவாதத்தைத் தூண்டி, அமைதி இன்மையை ஏற்படுத்த அடிப்படைவாதிகள் முன்னெடுக்கும் ஒரு நடவடிக்கையா என்ற சந்தேகம் சந்தேகம் எழுந்துள்ளது.