வட்டரக்க விஜித தேரரின் புதிய கட்சி ஆரம்பம்




தேசிய நல்லிணக்க முன்னணி” எனும் பெயரில் “வாளி” சின்னத்தில் புதிய அரசியல் கட்சி ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தேசிய நல்லிணக்க முன்னணி தலைவரும், செயலாளருமான வட்டரக்க விஜித தேரர் தெரிவித்துள்ளார்.

இந்தக் கட்சி தற்போழுது தேர்தல்கள் திணைக்களத்தில் பதிவு செய்வதற்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது எனவும், பதிவு செய்யப்பட்டதும் கட்சியின் கொள்கைகளும், திட்டங்களும் மக்கள் முன் வைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
இன, மத, மொழி, பேதங்களின்றி நாட்டு மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்து தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதே தந்து நோக்கம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இக்கட்சியின் முக்கிய பதிவுகளுக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஐ.எம்.இல்யாஸ், சங்கரன் ஆகியோர் உள்வாங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது