'பொட்ட' நௌபருக்கு பாதுகாப்புக்கு மத்தியில் சிகிச்சை

NEWS

கண்டி- பல்லேகல சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த மரண தண்டனை கைதியான, பொட்ட நௌபர் என்றழைக்கப்படும், 

மொஹமட் நியாஸ், வைத்தியசாலையில், இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுநீரக தொற்றுநோய் தொற்றுகாரணமாகவே அவர், கண்டி தேசிய  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 கடும் பாதுகாப்புக்கு மத்தியில் அவருக்கு சிகிச்சையளிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சரத் அம்பேபிட்டியவை படுகொலைச் செய்த குற்றச்சாட்டில், குற்றவாளியாக இனங்காணப்பட்டே, பொட்ட நௌபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Tags
3/related/default