மூதூர் தள வைத்தியசாலை அபவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்

தோப்பூர் ஏ.எஸ்.எம்.தாணீஸ்

திருகோணமலை மாவட்டத்திலுள்ள கிண்ணியா,மூதூர் தள வைத்தியசாலையிலுள்ள வைத்திய குறைபாடுகளையும் அதனை நிவர்த்திப்பது தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல் பிரதி சுகாதார அமைச்சர் பைசல் காசீம் தலைமையில் இன்று 07 கொழும்பு பிரதி சுகாதார அமைச்சரின் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இச் சந்திப்பில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் உட்பட அமெரிக்க உயர்ஸ்தரனாலயத்தின் பிரதிநிதி அண்டர்ஸ்ஸனும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது