ஸ்டார் ராசிக் அவர்களுடைய மரணம் ஊடக சமூகத்திற்கு பெரும் பேரிழப்பாகும்



கண்டியில் இருந்து எமது செய்தியாளர் இக்பால் அலி

மூத்த ஊடகவியலாளர் கலாபூசணம் ஸ்டார் ராசிக் அவர்களுடைய மரணம் ஊடக சமூகத்திற்கு பெரும் பேரிழப்பாகும் என்பது மட்டுமல்ல எமது குடும்பத்தோடு அவர் கொண்டிருந்த உண்மையான அன்பினதும், நெருங்கிய அந்நியோன்னிய உறவின் ஆத்ம நண்பரான அவரது இழப்பு ஈடு செய்ய முடியாது என்று முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ.ஹ ஹலீம் தெரிவித்தார்.

மூத்த ஊடகவியலாளர் கலாபூசணம் ஸ்டார் ராசிக் அவர்களுடைய மரணம் தொடர்பாக விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் இவ்வாறு இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்
ஊடகத்துறையிலும் சமூக சேவைச் செயற்பாட்டிலும் மிகவும் அமைதியாகவும் அடக்கமாகவும் நேர்த்தியாகவும் அவருக்கே உரித்தான பாணியில் அலாதியான முறையில் தம் வாழ்வியல் வரலாற்றில் பதிவு செய்துள்ளார். பிறர் நலன் பேணுவதில் அதிக அக்கறை உடையவர். 
என்னுடைய மாமா மறைந்த அமைச்சர் ஏ. சீ. எஸ் ஹமீத்  அவர்களுடன் மிகவும் நெருக்கமான உறவினைக் கொண்டிருந்தார். அவர் பற்றிய  வாழ்வியல் பதிவுகளையும் அரசியல் முகவரிகளையும் எழுத்துருவில் வெளிக்கொணருவதில் சளைக்காமல் ஈடுபட்டவர். எல்லாவற்றுக்கும் மேலாக நல்ல குணவியல்புகளை உடையவர்.
மொத்ததில் அன்னாரது துயரிழல் ஆழ்ந்துள்ள குடும்பத்தினருக்கும் ஊடகத் துறை சார்ந்தவர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.