சுஹைர் அலி
ஒவ்வொருவரும் ஒருவகையில் தனித்தன்மை பெற்றவர்கள்,இந்த உலகத்தில் பிறந்த அனவருக்கும் வரலாற்றின் பக்கங்களில் ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த பக்கத்தை இந்த உலகையே படிக்க வைப்பது உங்கள் கைகளில் தான் உள்ளது.
நமக்குப் புரட்சிகள் வேண்டும்,ஆனால் அவை சோப்பு நுரை போல ஊதி பெருக்கப்பட்டு காற்றடித்தால் உடைந்து கலைந்து விடக்கூடியவையாக இருக்கக்கூடாது. கல்கட்டிடங்களை போல ஒவ்வொரு கல்லாக எடுத்துக் கட்டி எழுப்பக்கூடியவையாக இருக்க வேண்டும். *வெறுமே வாயால் புரட்சிக் கூச்சலிடுபவர்கள் பயனற்றவர்கள், சீராக தொடர்ச்சியாக மக்களின் எண்ணங்களில் மாற்றத்தை கொண்டு வருபவர்களே உண்மையான் புரட்சியாளர்கள்*
கிராம்ஷி அந்த அரசாங்கத்தை நடத்தும் அனைவரையும் ஒட்டு மொத்தமாக ‘அரசியல்சமூகம்’ [Political Society] என்று சொன்னார். மக்களை குடிமைச் சமூகம் [Civil Society] என்றார்.குடிமைச் சமுகத்திலிருந்து அவர்களின் பிரதிநிதியாக சிலர் கிளம்பி வந்துதான் அரசாங்கத்தை அமைக்கிறார்கள்.அதிகாரம் பாலில் நெய் போல குடிமைச் சமூகத்தில் கலந்திருக்கிறது. குடிமைச் சமூகத்தின் எண்ணத்தை மாற்றாமல் அரசாங்கத்தை மாற்ற முடியாது.ஆகவே புரட்சி என்பது அடிதடிக்கலவரம் அல்ல. மக்களின் கருத்தை மாற்றுவதற்கான நிதானமான போராட்டம்தான்.
அவ்வாறு மக்களை மாற்றுவது என்பது எளிதல்ல,மக்களின் உள்ளமென்பது அவர்கள் பிறந்து வாழ்ந்த சூழலில் இருந்து உருவாவது. அதற்கு பல்லாயிரம் ஆண்டு பராம்பரியம் உள்ளது,மதம் பண்பாடு பழக்க வழக்கங்கள் என பல தளங்களில் மக்கள் உருவாகி வந்திருக்கிறார்கள் ஆகவே மிகத்தீவிரமான செயல்பாடுகள் மூலம் மிக மெதுவாகவே மக்களிடம் மாற்றத்தை உருவாக்க முடியும்
அரபு வசந்தம்,நான்கு வருடங்களுக்கு முன் துவங்கிய அரபு வசந்தம் இஸ்லாமிய உலகை உலுப்பிய இன்னொரு நிகழ்வு, இஸ்லாமிய வாதிகள் ஆட்சியில் அமர்ந்தார்;கள். அல்லது தங்களது வரலாற்று எதிரிகளான மதச்சார்பற்ற சிந்தனைப் பின்னணி கொண்டவர்களாக கூட்டுச் சேரவோ, அல்லது பேச்சுவார்த்தை நடாத்த வேண்டிய நிலைக்கோ தள்ளப் பட்டார்கள்.
எல்லோருடைய உள்ளங்களிலும் ஒரு வசந்த காலம் ஏட்படவேண்டும் ,உரிமையுடன் வாழ வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது,வெவ்வேறு மூளை,முடுக்குகளில் இருந்து குரல் கொடுக்கிறோமோ தவிர ,சங்கமித்த குரல் கொடுப்பதில்லை .
ஒரு சிறிய நுளம்பின் அல்லது வைரஸின் தாக்கத்தில் முக புத்தகத்தின் மூலம் ஒன்று பட்டு ஒரு எழுச்சியை ஏட்படுத்தியமை எம் சமூகத்திட்கு படிப்பினை தருகிறது .
அண்மையில் துருக்கியில்,எகிப்த்தில் ஆட்சி மாற்றம் ,தமிழ் நாடு ஜல்லிக்கட்டு போன்றவை இந்த சமூக வலயத்தளங்களினால் மாற்றப்பட்டவை ,ஆக நம் உரிமைக்காக உறவுகளுக்காக குரல் எழுப்ப இது முடிவல்ல இது ஆரம்பத்திட்கான ஆரம்பம்
''உங்கள் உள்ளம் மாறாத வரை சமூகம் மாறாது''
A Society never Changes Unless Change their Mind'
என்ற பொன் மொழிக்கேட்ப ,முதலில் எம்மை நாம் பலப் படுத்திக்க கொள்ள வேண்டும்
Sri Lanka Tamil Islamic Digital Media for Dawah, Sri Lanka Moor News and Culture and Tradition, Politics,Culture, Awareness and helping people. Muslim News in English, Arabic, Sinhala. First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform