என்னிடமிருந்து முஸ்லிம்களை நிரந்தரமாக பிரிப்பதற்கு வெளிநாட்டு சக்திகள் சதி செய்கின்றன என தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ, இந்த சூழ்ச்சிகளில் சிக்கி பலியாக வேண்டாம் எனவும் முஸ்லிம்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்கும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண முஸ்லிம் பிரதிநிதிகள் சிலருக்குமிடையேயான சந்திப்பொன்று நேற்று மாலை கொழும்பிலுள்ள மஹிந்தவின் இல்லத்தில் இடம்பெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், எனது ஆட்சிக்காலத்தில் முஸ்லிம்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. அத்துடன் அவர்களுக்கான சகல உதவிகளும் வழங்கப்பட்டன. இதனை எவராலும் மறுக்க முடியாது.
நான் வடக்கு கிழக்கில் பல பள்ளிகளை புனரமைத்திருக்கிறேன். அத்துடன் நாட்டில் புதிதாக 4 பள்ளிகளை நிர்மாணித்துக் கொடுத்திருக்கிறேன்.
இவ்வாறானதெரு நிலையில் இன்று முஸ்லிம்களை என்னிடமிருந்து நிரந்தரமாக பிரப்பதற்கு வெ ளிநாட்டு சக்திகள் சதித்திட்டங்களை தீட்டுகின்றன. அதற்காக பெருமளவில் நிதி ஒதுக்கப்படுகின்றது.
முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் இந்த சூழ்ச்சிக்கு யாரும் பலியாகிவிடக்கூடாது. அவர்கள் இந்த சூழ்ச்சியிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.
அத்துடன் எனது ஆட்சியில் முஸ்லிம்களுக்கு எதிராக எந்த செயற்பாடுகளும் இடம்பெறவில்லை என உறுதியாக கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
வடக்கு கிழக்கு இணைப்பு வடக்கு கிழக்கை இணைப்பதற்கு ரவூப் ஹக்கீமே பிரபாகரனுடன் ஒப்பந்தம் செய்தார். வடக்கும் கிழக்கும் இருவேறு மாகாணங்களாகும். அவை இரண்டிற்கும் ஒரே அளவிலான அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.
முஸ்லிம்களுக்கு கெளரவம் எனது ஆட்சியில் முஸ்லிம்களுக்கு கெளரவம் அளிக்கப்பட்டது. எனது அமைச்சரவையிலேயே அதிகளவிலான முஸ்லிம்கள் அங்கம் வகித்தனர். பிரதியமைச்சர்களாகவும் சிரேஷ்ட அமைச்சர்களாகவும் அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்களாகவும் நியமிக்கப்பட்டனர்.
மீள்குடியேற்றம் வடக்கில் அதிகளவான முஸ்லிம்கள் எனது ஆட்சிக் காலத்திலேயே மீள்குடியேற்றப்பட்டனர். ஆனால் இன்றைய நல்லாட்சியில் வடக்கின் மீள்குடியேற்றங்கள் ஸதம்பித்துப் போயுள்ளன.
தம்புள்ளை விவகாரம் தம்புள்ளை பள்ளிவாசலுக்கு 40 பேச்சஸ் காணி தருவதாக சொன்னோம். அந்த காணியில் பள்ளியை நிர்மாணித்துக்கொள்வதே நல்லது என முஸ்லிம்களிடம் வேண்டிக்கொள்கிறேன்.
அன்று நாம் காணி தருவதாக குறிப்பிட்டோம். அதனை நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. தம்புள்ளை விகாராதிபதியும் அவ்வாறு காணி வழங்கப்படுவதற்கு இணக்கம் தெரிவித்திருந்தார். அதனை நீங்கள் மறுத்தீர்கள்.
இன்று பள்ளியை புதிய இடத்திற்கு மாற்றிக்கொள்வதன் மூலம் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ளலாம் என்றார்.
Sri Lanka Tamil Islamic Digital Media for Dawah, Sri Lanka Moor News and Culture and Tradition, Politics,Culture, Awareness and helping people. Muslim News in English, Arabic, Sinhala. First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform