வடகிழக்கு மக்கள் நலனுக்கு குரல்கொடுக்கும் எந்த கட்சியுடனும் இணையத்தயார்




வெறும்  அபி­வி­ருத்­தியை  மாத்­தி­ர­மல்­லாது வட, கிழக்கு  பிரச்­சி­னை­களை முதன்­மைப்­ப­டுத்தும் எந்தக் கட்­சி­யு­டனும்  இணைந்து கொள்வேன் என ஸ்ரீ லங்கா  முஸ்லிம் காங்­கி­ரஸின் முன்னாள் செய­லாளர் நாய­கமும், முன்னாள்  இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான எம்.ரி.ஹஸன் அலி தெரி­வித்தார். 
பல கட்­சிகள், பல  அமைப்­புகள்  என்னை அழைக்­கின்­றன. எவ­ருக்கும் அழைக்கும்  உரிமை இருக்­கி­றது.

தனது எதிர்­கால அர­சியல் முன்­னேற்­பா­டுகள் தொடர்பில்  வின­வி­ய­போதே இவ்­வாறு  தெரி­வித்தார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில், கிழக்கில் கூட்டு  முன்­ன­ணி­யொன்று  உரு­வாக்கும்  திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

இந்த ஏற்­பா­டு­களில்  புத்­தி­ஜீ­விகள் இருப்­ப­தாக அறி­கிறேன்.  இந்தக்கூட்டு முன்­ன­ணியின்  கொள்­கைகள் என்ன?  திட்­டங்கள் என்ன? வட–­கி­ழக்கு  தொடர்­பான நிலைப்­பா­டுகள் என்ன?  என்­ப­ன­வற்றை அறிந்து கொண்ட பின்பே  கூட்டு முன்­ன­ணியில்  இணைந்து  கொள்­வ­தாக இல்­லையா-? என்று  தீர்­மா­னிக்க முடியும்.

வெறும் அபி­வி­ருத்­தியை மட்டும்  நோக்­கா­கவும் அமைச்சர்  பத­வி­களை  இலக்­கா­கவும் கொள்ளும், மக்­களை  ஏமாற்றி வரும்  கட்­சிகள், அமைப்­புகள்  எமக்குத்  தேவை­யில்லை. 

நான் தொடர்ந்து எனது அர­சியல் அபி­லா­ஷை­களை மக்­க­ளுக்குத் தெரி­வித்து வரு­கிறேன். தொடர்ந்து விழிப்­பு­ணர்வுக்  கூட்­டங்­களை  நடத்­த­வுள்ளேன்.

 எனது அடுத்த கூட்டம் பொத்­து­விலில் நடை­பெறும். கிழக்கு  மாகாணம் எங்கும்  கூட்­டங்­களை  நடத்­த­வுள்ளேன்.  அதன் பிறகு வடக்­கிற்கும் செல்வேன்.

 வடக்கு மக்­க­ளுக்கும் அர­சியல் தெளி­வு­களை  வழங்­குவேன்.  வடக்கு, கிழக்கில்  எமது மக்­களின்  காணிப்­பி­ரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காணப்­பட வேண்டும். ஆனால்  முஸ்­லிம்­காங்­கிரஸ்  தீர்­வு­களை  எட்­டு­வ­தற்­கான  நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­க­வில்லை. 

இறக்­காமம்  மாணிக்­க­மடு சிலை வைப்­பி­னை­ய­டுத்து  கிழக்கின் முஸ்­லிம்­களின்  காணி­ உ­ரிமை சவா­லுக்­குட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. பிர­பல அர­சியல் வாதி­யொ­ருவர் இதன் பின்­ன­ணியில் இருந்து செயற்­ப­டு­கிறார்.

இதன் பிறகு  பதவி, பட்டம்,  அமைச்சர் பதவி  எனக்குத் தேவை­யில்லை.  வட­கி­ழக்கு முஸ்­லிம்­களின்  நிலை பரி­தா­பத்­துக்­குள்­ளா­கி­யுள்­ளது.  இம்­மக்­களின்  பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு கிட்ட வேண்டும்.

 பஷீர் சேகு தாவூதுக்கும் எனக்கும் அரசியல் ரீதியாக  எந்தத் தொடர்பும்  இல்லை.  எனது 32 வருட அரசியல்  வாழ்வில்  நான் பல அனுபவங்களைப் பெற்றுள்ளேன்.

என்னை  எவரும் ஏமாற்ற முடியாது என்றார்.  (விடிவெள்ளி)