மேலதிக ஹஜ் கோட்டா இலங்கைக்கு கிடைக்க அதிகவாய்ப்பு

சவூதி அர­சாங்கம் வரு­டாந்தம் வழ­மை­யாக இலங்­கைக்கு வழங்­கி­வரும் ஹஜ் கோட்­டாவை விட இவ்­வ­ருடம் மேல­திக கோட்­டாவைப் பெற்றுக் கொள்­வ­தற்கு முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டுள்­ள­தாக அரச ஹஜ் குழுவின் உறுப்­பி­னரும் அமைச்சர் ஹலீமின் பிரத்­தி­யேகச் செய­லா­ள­ரு­மான எம்.எச்.எம்.பாஹிம் தெரி­வித்தார். 



இவ்­வ­ரு­டத்­துக்­கான ஹஜ் கோட்டா தொடர்பில் வின­வி­ய­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்தும் இது தொடர்­பாக கருத்துத் தெரி­விக்­கையில், கடந்த வருடம் இலங்­கைக்கு 2240 ஹஜ் கோட்­டாவே கிடைத்­தது.

மேல­திக கோட்­டாவைப் பெற்றுக் கொள்­வ­தற்குப் பல முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்­டன. ஜனா­தி­பதி பிர­தமர் ஆகியோர் மூலமும் முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்டும் மேல­திக கோட்டா கிடைக்­க­வில்லை. இதனால் திட்­ட­மிட்­டி­ருந்த பலர் ஹஜ் வாய்ப்­பினை இழந்­தார்கள். 

இவ்­வ­ருடம் மேல­திக கோட்­டாவைப் பெற்றுக் கொள்­வ­தற்கு தற்­போ­தி­லி­ருந்தே நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன.

சவூதி அரே­பிய அரச ஹஜ் அமைச்­சரை நேரில் சந்­தித்து கலந்­து­ரை­யா­டு­வ­தற்கு நேரம் ஒதுக்கித் தரு­மாறு அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீமினால் வேண்­டுகோள் விடுக்­கப்­பட்­டுள்­ளது. 

இந்த சந்­திப்பின்போது இலங்­கைக்கு மேல­திக ஹஜ் கோட்­டாவின் அவ­சி­யத்தை அமைச்சர் ஹலீம், சவூதி ஹஜ் அமைச்சரிடம் எடுத்து விளக்கவுள்ளார்.

சவூதியிலுள்ள இலங்கைத் தூதுவர் மூலமும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றார்.