வெனிசுலா ஆர்ப்பாட்டத்தில் 11 பேர் பலி



எண்ணெய் வளமிக்க வெனிசுலாவின் ஜனாதிபதி நிக்கலஸை பதவி விலகக் கோரி மக்கள் தொடர்ந்து முன்னெடுத்து வரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் நேற்றைய நாளில் மாத்திரம் சுமார் 11 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் போராட்டம் நாடு முழுவதும் வலுப்பெற்று வருவதாகவும், இதனால் வெனிசுலாவின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு தகவல்கள் தெரிவித்துள்ளன.

குறித்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் காரணமாக நேற்றைய நாளில் மாத்திரம் 11 பேர் உயிரிழந்துள்ளதோடு,கடந்த ஒரு வாரத்தில் மொத்தமாக 20 பேருக்கு அதிகமானோர் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.