கல்லீரல் அழற்சி தொற்றை ஒழிக்க அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும்



ஹெபன்டிக்ஸ் { appendix } எனப்படும் கல்லீரல் அழற்சி தொற்றை ஒழிக்க, உலக நாடுகள் ஒன்றிணைந்து செயற்படவேண்டும் உலக சுகாதார நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.

எச்.ஐ.வி மற்றும் காசநோய் போன்று உலகளவில் அதிகமானோரை ஹெபன்டிக்ஸ் கொல்கிறதாகவும் உலக சுனாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

2015 ஆம் ஆண்டில் ஹெபன்டிக்ஸ் நோயினால் 1.34 மில்லியன் பேர் உயிரிழந்தனர் என அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹெபன்டிக்ஸ் நோயினால் சுமார் 325 மில்லியன் மக்கள் வாழ்வதாக கணிக்கப்பட்டுள்ளது. ஹெபன்டிக்ஸ் நோய் தடுப்பூசிகள் மற்றும் மருந்துகள் இருக்கின்றபோதும், அனைவரையும் அவை சென்றடையவில்லை.

ஹெபன்டிக்ஸ் நோய் காணரமாக மில்லியன் கணக்கான மக்கள் தீவிர கல்லீரல் நோய், புற்றுநோய் மூலமாக இறுதியாக மரணத்தை தழுவும் அபாயத்தில் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிகத்துள்ளது.