பாடசாலைகளை சுத்தப்படுத்த கல்வியமைச்சு உத்தரவு பிறப்பித்துள்ளது

இரண்டாம் தவணைக்காக அனைத்து பாடசாலைகளும் திறக்கப்படுவதற்கு முன்னர், பாடசாலைகளில் டெங்கு பரவுவதற்கு ஏதுவான காரணிகளை முற்றாக அழித்தொழித்து, சுற்றுச்சூழலை,  நன்றாக சுத்தப்படுத்துமாறு, அனைத்து பாடசாலைகளின் அதிபர்களுக்கும்,  கல்வியமைச்சு, நேற்று (21) அறிவித்துள்ளது.

பாடசாலைகளை சுத்தப்படுத்துவதற்காக, பெற்றோர், பழைய மாணவர்கள் சங்க உறுப்பினர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழுவின் அங்கத்தவர்கள்
போன்றவர்களின் உதவிகளைப் பெற்றுக்கொள்ளுமாறு பணிப்புரை
விடுக்கப்பட்டுள்ளது.

அனைத்து அரசாங்க பாடசாலைகளும், எதிர்வரும் புதன்கிழமை (26)
ஆரம்பிக்கப்படவுள்ளது. முஸ்லிம் பாடசாலைகள், கடந்த 19ஆம் திகதி, இரண்டாம் தவணைக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இரண்டாம் தவணைக்காக அனைத்து பாடசாலைகளும் திறக்கப்படுவதற்கு முன்னர், பாடசாலைகளில் டெங்கு பரவுவதற்கு ஏதுவான காரணிகளை முற்றாக அழித்தொழித்து, சுற்றுச்சூழலை, நன்றாக சுத்தப்படுத்துமாறு, அனைத்து பாடசாலைகளின் அதிபர்களுக்கும், கல்வியமைச்சு, நேற்று (21) அறிவித்துள்ளது.
பாடசாலைகளை சுத்தப்படுத்துவதற்காக, பெற்றோர், பழைய மாணவர்கள் சங்க உறுப்பினர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழுவின் அங்கத்தவர்கள் போன்றவர்களின் உதவிகளைப் பெற்றுக்கொள்ளுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
அனைத்து அரசாங்க பாடசாலைகளும், எதிர்வரும் புதன்கிழமை (26) ஆரம்பிக்கப்படவுள்ளது. முஸ்லிம் பாடசாலைகள், கடந்த 19ஆம் திகதி, இரண்டாம் தவணைக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்