குவைட் எதிர்க் கட்சித் தலைவர் 2 வருட சிறை வாழ்வின் பின் விடுதலை



முக்கிய குவைட் எதிர்க் கட்சி தலைவர் முஸல்லம் அல் பராக் இரண்டு வருட சிறைவாசம் அனுபவித்ததன் பின்னர் நேற்று வெள்ளிக்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

குவைட் நாட்டு அமீரை ஏசியமைக்காக இவருக்கு இரண்டு வருட சிறைத் தண்டனை வழங்கப்பட்டிருந்தது. 61 வயதுடைய பராக் நேற்று குவைட் சிறையிலிருந்து விடுதலையானபோது தனது ஆதரவாளர்களுடன் சிறைச்சாலை வளாகத்தில் நடந்து சென்றுள்ளதாக ஏ.எப்.பி. செய்திச் சேவை அறிவித்துள்ளது.