பேருவைளை ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்துக்கு 2017 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர். இதற்கான நேர்முக மற்றும் எழுத்துப் பரீட்சைகள் எதிர்வரும் 22ஆம் 23ஆம் திகதிகளில் காலை எட்டு மணி முதல் ஜாமிஆ நளீமிய்யா வளாகத்தில் நடைபெறவுள்ளது.
நேர்முக எழுத்துப் பரீட்சைகள் வடக்கு, வட மத்திய, வட மேல், மத்திய மற்றும் மேல் மாகாணங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு 22.04.2017 சனிக்கிழமையும் தெற்கு, ஊவா, சப்ரகமுவ மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு 23.04.2017 ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறவுள்ளதாகவும் அது தொடர்பான மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ள விரும்புபவர்கள் 0342276338, 0776504765, 0773573815 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறும் ஜாமிஆ நளீமிய்யாவின் பணிப்பாளர் கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்