மீதொட்டுமுல்ல குப்பைமேடு சரிந்ததன் விளைவாக உயிரிழந்தவர்களினது குடும்பத்தினருக்கும். பாதிக்கப்பட்டவர்களுக்கும் தமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம்,இவ்வாறான அனர்த்தங்கள் இனிமேலும் ஏற்பாடாது தடுப்பதற்கான நடவடிக்கைளை மேற்கொள்வது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு அமெரிக்கா சென்றுள்ள அமைச்சர் ஹக்கீம், இந்த துக்ககரமான சம்பவத்தை கேள்வியுற்று தாம் அதிர்ச்சியும், கவலையும் அடைந்ததாகவும், சம்பந்தப்பட்ட அமைச்சர்களுடன் தொடர்புகொண்டு மீட்பு நடவடிக்கைகள் மற்றும் நிவாரணஉதவிகள் பற்றி கலந்துரையாடியதாகவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன், தாம் நகர அபிவிருத்தி அமைச்சராக பதவி வகித்த குறுகிய காலத்தில் நகர பிரதேசங்களில் கழிவகற்றல் மற்றும் குப்பை கூளங்களை உரிய முறையில் பொதுமக்களை பாதிக்காத விதத்தில் கையாள்வது குறித்து பூர்வாங்க நடவடிக்கைகளை மேற்கொண்டிருத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்