மீதொடமுல்ல குப்பை மேடு சரிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 14 ஆம் திகதி ஏற்பட்ட இந்த அனர்த்தத்தில் சுமார் 150 வீடுகள் சேதமாக்கப்பட்டதுடன் 180குடும்பங்களைச் சேர்ந்த 625 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது

0 கருத்துகள்