ஏறாவூரில் இடம்பெற்ற இரட்டைப் படுகொலைச் சம்பவம் தொடர்பான 6 சந்தேக நபர்களினதும் விளக்கமறியல் எதிர்வரும் மே மாதம் 03ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் மட்டக்களப்பு மேலதிக நீதிபதி எம்.ஐ.எம்.றிஸ்வி முன்னிலையில் இன்று, சந்தேகநபர்களை ஆஜர்படுத்தியபோதே, விளக்கமறியலை நீடித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்ற விடுமுறை தினம் என்பதன் காரணமாக சந்தேக நபர்கள் இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
ஏறாவூர், முகாந்திரம் வீதியை அண்டி அமைந்துள்ள தங்களின் வீட்டில் வசித்துவந்த தாயான நூர்முஹம்மது, அவரது திருமணமாகிய மகளான முஹம்மது யூசுப் ஜெஸீரா பானுவும் கொலை செய்யப்பட்ட நிலையில் அவர்களின் சடலங்கள் கடந்த செப்டெம்பர் 11ஆம் திகதி மீட்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றிகள் live360
