இப்ராஹிம் அன்ஸார் அவர்களின் இரண்டாவது புதல்வர் மூனிஸ் அன்ஸார் வபாத்



மலேசியாவுக்கான முன்னாள் இலங்கை உயர் ஸ்தானிகர் இப்ராஹிம் அன்ஸார் அவர்களின் இரண்டாவது புதல்வர் மூனிஸ் அன்ஸார்  இன்று மாலை எதிர்பாராமல் இடம்பெற்ற ஒரு அசம்பாவிதத்தில் உயிரிழந்துள்ளதாக கொழும்பில் இருந்து கிடைக்கும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

டயலொக் தொலைதொடர்பு நிறுவனத்தில் பணியாற்றியுள்ள அவர் அந்த நிறுவன தலைமையகத்தின் 15 வது மாடியில் இருந்து கிழே விழுந்து பலியாகியுள்ளதாக தகவல் கிடைத்துள்ள நிலையில் இவரது மரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இவரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று இரவு இடம்பெறவுள்ளதாக அவரது குடும்ப உறவினர் ஒருவர் குறிப்பிட்டார்.