வட கொரியா தொடரந்து அணு ஆயுத சோதனைகள் மேற்கொண்டால், புதிய தடைகள் விதிிக்கப்படும் என ஐ.நா.சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. வடகொரியா எந்தவொரு ஏவுகணைகளையும், அணு ஆயுதங்களையும் சோதனை செய்து பார்க்க கூடாது என ஐ.நா.சபை தடைவிதித்துள்ளது.
மேலும்
ஏனைய நாடுகளின் அமைதியை பாதிக்கும் வகையில் வடகொரியாவின் நடத்தை இனியும்
அமைந்தால் அந்நாட்டின் மீது மேலும் புதிய தடைகள் விதிக்கப்படும் எனவும்
கடுமையாக எச்சரித்துள்ளது.
இந்த
நிலையில், ஐ.நா.வின் எச்சரிக்கையை மதிக்காமல்,வடகொரியா தொடர்ந்து ஏவுகணை
சோதனைகளை செய்து வருகிறது. கடந்த மாதத்தில், 5 ஏவுகணைகளை செலுத்தி சோதனை
நடத்தியது. இதில் இறுதியாக ஏவப்பட்ட ஏவுகணை சோதனை தோல்வியடைந்தது.
அமெரிக்காவும்
தொடர்ந்து வடகொரியாவை எச்சரித்து வருகிறது.இதனால் குறித்த இரு
நாடுகளுக்குமிடையில் எப்போது வேண்டுமானாலும் போர் ஏற்படக்கூடிய அபாயம்
உள்ளது.
நன்றிகள் live360
