நோர்வேயில் பிரம்மாண்டமாக உருவாகும் உலகின் முதல் கப்பல் சுரங்கப் பாதை

நோர்வே நாட்டில் உலகிலேயே முதல் கப்பல் சுரங்க பாதை உருவாகவுள்ளது
நோர்வே நாட்டின் அரசு, ரயில் வழி சுரங்க பாதை, சுரங்க வழி சாலை போல கப்பல்களின் பயணநேரத்தைக் குறைத்து அவற்றின் பாதுகாப்பை மேம் படுத்தும் திட்டமாக கப்பல் வழி சுரங்க பாதையை வடிவைக்கவுள்ளது.



இந்த சுரங்க பாதை கடும்பாறைகளால் ஆன ஸ்டட் தீபகற்ப கடல்பகுதியில் அமைக்கப்படவுள்ளது. இந்த கப்பல் சுரங்க பாதை வழியாக 20 ஆயிரம் டன் எடையுள்ள கப்பல்கள் வரை செல்ல முடியும்.

இந்த சுரங்கத்தை அமைக்க 80 லட்சம் டன் கற்களை வெடிக்க வைத்து தகர்க்க வேண்டியிருக்கும் என தெரிகிறது. 2023-ம் ஆண்டுக்குள் இந்தச் சுரங்கத்தை வெட்டி முடிக்க முடியும் எனவும், உலக அதிசயங்களில் ஒன்றாக இந்தக்
கப்பல் சுரங்கப் பாதை அமையும் எனவும் நோர்வே அரசு கருதுகிறது