வில்பத்து தொடர்பில் சிப்லி பாரூக் தனிநபர் பிரேரணையை முன்வைத்துள்ளார்


பொது மக்களினுடைய காணிகளை உள்ளடக்கியதாக அறிக்கையிடப்பட்டுள்ள வில்பத்து பிரதேசத்திற்குரிய வர்த்தமானி அறிவித்தல்களை உடனடியாக ரத்துச் செய்ய வேண்டும் என கிழக்கு மாகாண சபை தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென கோரி கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக் தனிநபர் பிரேரணை ஒன்றினை முன் வைத்துள்ளார்.

 கிழக்கு மாகாண சபையின் 76ஆவது அமர்வு அடுத்த செவ்வாய்கிழமை நடைபெற்றவுள்ள நிலையில் வில்பத்து காணிப் பிரச்சினை தொடர்பாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் இந்த தனி நபர் பிரேரணையை முன் வைத்துள்ளார்.

இந்த தனி நபர் பிரேரணை கிழக்கு மாகாண சபைத் தவிசாளர் கலப்பத்தி சந்திரதாச அவர்களுக்கு  அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அப்பிரேரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது வில்பத்து பிரதேசத்திலுள்ள முஸ்லிம் மக்களின் பூர்வீக காணிகள் உள்ளடங்கிய பகுதிகளை அவசர அவசரமாக வன விலங்குக்குரிய பிரதேசமாக வர்த்தமானியிடும் நடவடிக்கைகள் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 கடந்த மகிந்த ராஜபக்ஸ அவர்களின் சர்வாதிகார அரசாங்கத்தில் கூட நடைபெறாத இத்தகைய விடயங்கள் இந்த நல்லாட்சி அரசாங்கத்தினூடாக நடைபெறுவது மிகவும் கவலைக்குரியதாகும்.

 எனவே பொது மக்களினுடைய காணிகளை உள்ளடக்கியதாக அறிக்கையிடப்பட்டுள்ள வில்பத்து பிரதேசத்திற்குரிய வர்த்தமானி அறிவித்தல்களை உடனடியாக ரத்துச் செய்ய வேண்டும் என இச்சபையில் முன்மொழிகின்றேன் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்