பாகிஸ்தானுடன் உள்ள பொருளாதார உறவைப் பலப்படுத்தும் வகையில் அந்நாட்டுக்கு எரிவாயு மற்றும் மின்சாரம் என்பவற்றை விற்பனை செய்ய ஈரான் தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளது.
ஈரான் வெளிவிவகார அமைச்சர் மொஹமட் ஜாவாத் சரீப் இதனைக் கூறியுள்ளார். ஈரானின் தெஹ்ரான் நகரில், பாகிஸ்தான் சபாநாயகர் சர்தார் அயாஸுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஈரான் வெளிவிவகார அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்
