சிரியாவின் இறைமையைப் பாதுகாப்பதற்கு தேவையான வகையில் ஏவுகணை எதிர்ப்பு உபகரணங்களை சிரியாவின் அரசாங்கத்துக்கு வழங்குவதற்கு ரஷ்யா தயாராகவுள்ளதாக தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் சிரியாவின் சிவில் மக்களை இலக்குவைத்து விஷ வாயுத் தன்மை கொண்ட ஏவுகணைத் தாக்குதலை நடாத்தியதாக சிரியாவின் மீது அமெரிக்க அரசாங்கம் குற்றம்சாட்டியது. அத்துடன், சிரிய இராணுவ முகாம் மீது அமெரிக்க விமானப்படை தாக்குதலையும் மேற்கொண்டது.
அமெரிக்காவின் இந்த தாக்குதல் ரஷ்யாவினால் பாரிய கண்டனங்களுக்குள்ளானது. விஷ வாயு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் எந்தவிதமான விசாரணையும் நடாத்தப்படாமல், எழுந்தமாறான தீர்மானத்தை வைத்து சிரிய இராணுவம் மீது தாக்குதலை அமெரிக்கா மேற்கொண்டிருந்ததாகவும் ரஷ்யா குற்றம்சாட்டியிருந்தது.
இந்நிலையிலேயே ரஷ்யா ஏவுகணை எதிர்ப்பு உபகரணங்களை வழங்க தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
