கல்கிசையில் முஸ்லிம் இளம் பெண் கணவனால் வெட்டிக் கொலை

 
 
கல்கிசை, அத்திடிய பகுதியில் முஸ்லிம் பெண் ஒருவர் அவரது கணவரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் இன்று ஞாயிற்றுக் கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவத்தில் உயிரிழந்தவர் 35 வயதான பாத்திமா அறூசியா என அடையாளம் காணப்பட்டுள்ளார். குடும்பத் தகராறு காரணமாகவே இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

கணவரான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பொலிசார் மேலதிக விசாரணைகளை தொடர்கின்றனர்.