திருகோணமலை துறைமுகத்திலுள்ள எண்ணெய்த் தாங்கிகளை இந்திய நிறுவனத்துக்கு (ஐ.ஓ.ஸி.) வழங்க அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பெற்றோலிய கூட்டுத்தாபன தொழிற்சங்க ஊழியர்கள் இன்று (23) நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பு டநவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளது.
பெற்றோலிய கூட்டுத்தாபன தொழிற்சங்கங்களின் ஒன்றிய ஏற்பாட்டாளர் டீ.ஜே. ராஜகருணா இதனை அறிவித்துள்ளார். இதனால், நாளை நாடு முழுவதும் எரிபொருள் பற்றாக்குறையொன்று நிலவும் அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது
