மீத்தொட்டமுல்ல மக்களையும் அரசாங்கம் ஏமாற்றப் போகிறதா?

 
 
மீத்­தொட்­ட­முல்­லவில் குப்­பை­மேடு சரிந்து வீழ்ந்­ததில் ஏற்­பட்ட                         மர­ணங்­க­ளுக்கு பொறுப்­புக்­கூற கட­மைப்­பட்­டுள்­ள­தாகக் குறிப்­பிட்­டுள்ள     பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இதில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு எதிர்­வரும் ஜூன் அல்­லது ஜூலை மாத­ம­ளவில் புதிய வீடு­களை வழங்­கு­வ­தற்கு             தீர்­மா­னித்­துள்­ள­தா­கவும் தெர­வித்­துள்ளார்.

வியட்­னா­மி­லி­ருந்து நாடு திரும்­பிய பிர­தமர், நேற்­றைய தினம் மீதொட்­ட­முல்ல பகு­திக்கு விஜயம் செய்து நிலை­மை­களை அவ­தா­னித்­த­துடன் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளையும் சந்­தித்துக் கலந்­து­ரை­யா­டி­யி­ருந்தார்.

இதற்­கி­டையில் இந்த விவ­காரம் தொடர்பில் நேற்­றைய தினம் ஜனா­தி­பதி மற்றும் பிர­த­மரின் பங்­கு­பற்­று­த­லுடன் இடம்­பெற்ற உயர்­மட்டக் கூட்­டத்தில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நஷ்­ட­யீடு வழங்­கு­வது தொடர்பில் விரி­வாக      ஆரா­யப்­பட்­டுள்­ளது. 

இதன்­போது இவ் விபத்தில் முழு­மை­யாக சேத­ம­டைந்த 98 வீடு­களில் வசிக்கும் மக்­க­ளுக்­காக மிகவும் துரித கதியில் வீடு­களை பெற்றுக் கொடுக்க தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.  

அனர்த்­தத்­தினால் ஏற்­பட்ட பாதிப்­புக்கள் தொடர்பில் மேற்­கொள்­ளப்­படும் மதிப்­பீ­டு­களை இவ்­வா­ரத்­தினுள் முடித்து விட்டு, மதிப்­பீட்டு அறிக்­கை­யொன்றை பெற்றுத் தரு­மாறு மதிப்­பீட்டு திணைக்­களம் உட்­பட  சம்­பந்­தப்­பட்ட அனைத்து நிறு­வ­னங்­க­ளுக்கும் ஆலோ­சனை வழங்­கப்­பட்­டுள்­ளது. அவ்­வ­றிக்கை கிடைத்­த­வுடன் அனைத்து நஷ்­ட­ஈ­டு­க­ளுக்­கா­கவும் வழங்­கப்­பட வேண்­டிய நிதியை துரித கதியில் பெற்றுக் கொடுப்­ப­தற்கும் தேவை­யான நிதி­யு­த­வி­களை திறை­சே­ரி­யி­லி­ருந்து துரி­த­மாக விடு­விப்­ப­தற்கும் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

மேற்­படி தீர்­மா­னங்­க­ளுக்­க­மை­வாக அர­சாங்கம் துரித கதியில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நிவா­ர­ணங்­க­ளையும் நஷ்­ட­யீ­டு­க­ளையும் வழங்க வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். எனினும் வழக்கம் போல இழுத்­த­டிப்­பு­களை மேற்­கொண்டு இம் மக்­களை மேலும் மேலும் நெருக்­க­டியில் தள்ள அர­சாங்கம் முனையக் கூடாது.

ஏலவே கொலன்னாவ, வெல்­லம்­பிட்டி உட்­பட கொழும்பு மற்றும் கம்பஹாவின் பல பகு­தி­க­ளிலும் கடந்த வருடம் ஏற்­பட்ட வெள்ள அனர்த்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு இது­வரை போது­மான நிவா­ர­ணங்கள் வழங்­கப்­ப­ட­வில்லை. வாக்­கு­று­தி­ய­ளிக்­கப்­பட்ட படி 10 ஆயிரம் ரூபா பண உதவி கூட பல குடும்­பங்­க­ளுக்கு கிடைக்கப் பெற­வில்லை என மக்கள்         குற்­­றம்­சாட்­டு­கின்­றனர்.

மீத்­தொட்­ட­முல்ல குப்­பை­மேடு சரிவு அனர்த்­த­மா­னது மனி­தர்­களால் ஏற்பட்டது என்­பதில் சந்­தே­க­மில்லை. அந்த இடத்தில் அர­சாங்­கமே குப்­பை­களைக் கொட்டி குப்பை மலையை தோற்­று­வித்­தது. இன்று அதே குப்பை மலை சரிந்து மக்­களின் உயிர்கள் காவு கொள்­ளப்­பட்­டுள்­ளன.

என­வேதான் அர­சாங்கம் இதற்கு முழு­மை­யாகப் பொறுப்புச் சொல்லக் கட­மைப்­பட்­டுள்­ள­துடன் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு முழுமையாக நிவா­ர­ணங்­களை வழங்கும் தனது கட­மையைச் சரி­வர நிறை­வேற்­றவும் முன்­வர வேண்டும்.

அதே­போன்று இந்த விட­யத்தைப் பயன்படுத்தி அரசியல்வாதிகள் குற்றச்சாட்டுக்களை அள்ளி வீசுவதைத் தவிர்த்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் விடயத்தில் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும். மேலும் குப்பைகளை எங்கு கொட்டுவது என்பதில் கொழும்பு எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்குத் தீர்வு காணவும் அனைவரும் கைகோர்க்க வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறோம்.