நாட்டில் கடந்த சில வாரங்களாக முஸ்லிம்களுக்கெதிரான அசம்பாவித சம்பவங்கள் இடம்பெற்று வருவதை எங்களால் பார்க்க முடிகிறது. அளுத்கம கலவரத்தின் முற்பட்ட காலப்பகுதியிலும் இப்படித்தான் இருந்தது.
அக்குரஸ்ஸ பெற்றோல் குண்டு வீச்சு, காலி சியாரம் உடைப்பு, தம்புள்ள பள்ளி விவகாரம், அநுராதபுரம் பள்ளி பிரச்சினை, திருகோணமலை பள்ளி பிரச்சினை இறக்காம சிலை விவகாரம் என்று அடுக்கடுக்காக ஆயிரம் பிரச்சினைகள் கிளம்புவது சற்று சிந்திக்க வைக்கிறது.
இவை அனைத்திற்கும் காரணம் பொதுபலசேனா என கண்காணிக்க முடிகிறது இலங்கையின் இனாவத குழுக்களுக்கு தலைமை வகிக்கும் ஞானசார இப்படி அடுக்கடுக்காக பிரச்சினைகளை துாண்டிவிடுவதாக எண்ண தோன்றுகிறது.
அண்மையில் மட்டக்களப்பிற்கு பேரணி வந்த ஞானசார இஸ்லாமிய பல்கலைக்கழகத்தையும் பார்த்து விசம கருத்துக்களை கக்கினார், அண்மைக்காலமாக பதுங்கியிருக்கும் பொதுபலசேனா ஏதோ திட்டத்தினை பின்னிருந்து தீட்டுவதாக எண்ண முடிகிறது. எதற்கும் அவதானமாக இருப்போம்.
