கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ். உதுமாலெப்பை நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபை அமர்வில் மூன்று தனிநபர் பிரேரணைகளை சமர்ப்பித்து உரையாறற்றவுள்ளார்.
கிழக்கு மாகாண சபையின் 77வது சபை அமர்வு நாளை (23) காலை 9.30மணிக்கு சபை தவிசாளர் தலைமையில் நடைபெறவுள்ளது. இதேவேளை கிழக்கு மாகாண எதிர்க்கட்சித்தலைவர் உதுமாலெப்பை மூன்று முக்கிய பிரேரணைகளை சமர்ப்பித்து உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூதூர் தள வைத்தியசாலையை டீ தரத்திலிருந்து யு தரத்திற்கு தரமுயர்த்துவத்திற்கு கிழக்கு மாகாண அமைச்சரவையினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை அமுல்படுத்தக் கோரி தனிநபர் பிரேரணை ஒன்றினையும், அட்டாளைச்சேனை அல் - அர்ஹம் வித்தியாலய மாணவர்களின் கல்வி நலன் கருதி புதிய காணியினை கொள்வனவு செய்வதற்கான நிதியினை ஒதுக்குமாறு கோரி தனிநபர் பிரேரணை ஒன்றினை சமர்ப்பித்தும் உரையாற்றவுள்ளார்.
அத்துடன், கிழக்கு மாகாண உள்ளுராட்சி மன்றங்களின் கணக்கு நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ள நிதி உதவியாளர்களை பதில் கணக்காளர்களாக அல்லது உள்ளுராட்சி மன்ற கணக்காளர்களாக நியமிப்பதற்கு கோரும் தனிநபர் பிரேரணை ஒன்றினையும் சமர்ப்பித்து உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
(எம்.ஜே.எம்.சஜீத்)
