இவ்வருடத்தின்
ஹஜ் பயண ஏற்பாடுகளை முன்னெடுப்பதற்காக 96 ஹஜ் முகவர்கள் முஸ்லிம்
சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் தெரிவு
செய்யப்பட்டுள்ளனர்.
அஞ்சல்,
அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகாரங்களுக்கான அமைச்சினால்
நியமிக்கப்பட்ட சுயாதீனமான குழுவொன்றினால் நேர்முகப் பரீட்சை
நடத்தப்பட்டே இத்தெரிவு இடம்பெற்றுள்ளது.
சுமார்
125 முகவர் நிலையங்கள் இவ்வருட ஹஜ் முகவர் நியமனங்களைப்
பெற்றுக்கொள்ள விண்ணப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இவ்வருடத்துக்கென
நியமனம் பெற்றுள்ள ஹஜ் முகவர்களின் பெயர் மற்றும் விபரங்களும்
அவர்கள் அறவிடும் ஹஜ் கட்டணங்களும் அடுத்த வாரம் பத்திரிகைகளில்
விளம்பரப்படுத்தப்படுமெ னவும் ஹஜ் கடமையை மேற்கொள்வதற்கு
தமது பயணத்தை உறுதி செய்துள்ள பயணிகள் தாம் விரும்பும் ஹஜ்
முகவர்களைத் தெரிவு செய்து கொள்ள முடியுமெனவும் அரச ஹஜ் குழுவின் தலைவர்
கலாநிதி எம்.ரி. சியாத் தெரிவித்தார்.
