பாறுக் ஷிஹான்
யாழ்ப்பாணம் வலி
வடக்கு பகுதிக்குட்பட்ட அண்மையில் மீள் குடியேற்றம் செய்யப்பட்ட மயிலிட்டி
வடக்குமுனை காணி ஒன்றில் உள்ள கிணற்றில் இருந்து அதிகளவான வெடிபொருட்கள்
காங்கேசந்துறை பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
நேற்று
கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய குறித்த வெடி இன்றைய தினம்(5) விசேட
அதிரடிப்படையினரின் உதவியுடன் மீட்கப்பட்டுவதாக காங்கேசந்துறை பொலிஸார்
குறிப்பிட்டனர்.
இதன் போது 3000 தோட்டாக்கள்,30 கைக்குண்டுகள் மற்றும் இனங்கான முடியாத வெடிபொருட்கள் என்பன தற்போது மீட்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக இப்பிரதேசம் இராணுவ கட்டுப்பாட்டு பகுதிகளாக இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
