வெள்ளம்பிடிய கொஹிலவத்தையில் அமைந்துள்ள இப்ராஹிமிய்யா ஜும்ஆ முஸ்லிம் பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நள்ளிரவு 1 மணியளவில் ஹெல்மட் அணிந்து வேன் ஒன்றில் வருகை தந்த சுமார் 6 முதல் 8 பேர் கொண்ட குழுவொன்றே இவ்வாறு பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
பள்ளிவாசலின் முன் கேட்டின் மீதேறி உள்ளே நுழைந்து குழுவினர் பள்ளிவாசல் கண்ணாடிகள், கதவு, ஜன்னல் போன்றவற்றை சேதப்படுத்தியுள்ளதாகப் பள்ளிவாசல் நிர்வாகசபை உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பள்ளிவாசலில் தங்கியிருந்த பெயிண்ட் வேலை செய்பவர்கள், சத்தம் கேட்டு எழும்பி வந்தவுடன், தாக்குதல் நடத்திய கும்பல் அங்கிருந்து தப்பியோடியதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸ் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், தற்பொழுது பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. வெள்ளம்பிடிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
