அபாயா
மற்றும் பர்தா அணிந்து கொண்டு கண்டி குட்செட் பஸ் தரிப்பிடத்தில்
சந்தேகத்துக்கிட மான முறையில் நின்று கொண்டிருந்த ஆண் ஒருவர் கண்டி
பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தினரால் கைது
செய்யப்பட்டுள்ளார்.
உடல்
முழுவதும் மறைக்கும் வகையில் அபாயா மற்றும் பர்தா அணிந்து கொண்டு
சந்தேகத்துக்கிடமான முறையில் பஸ் தரிப்பிடத்தில் நின்று
அவ்விடத்துக்கு வந்து செல்லும் பயணிகளை நோட்டமிட்டு வருவதனை இரு
பொலிஸார் சுமார் 2 மணித்தியாலங்களாக அவதானித்து வந்துள்ளனர்.
பின்னர்
கண்டி பொலிஸ் தலைமையகத்தின் பெண் பொலிஸ் அதிகாரி ஒருவரை
அவ்விடத்துக்கு வரவழைத்து சந்தேகத்துக்கிடமான முறையில் நின்று
கொண்டிருந்த நபரை சோதனையிட முற்பட்டபோது அவர், பயணித்துக்
கொண்டிருந்த பஸ்ஸொன்றில் ஏறித் தப்பிச்செல்ல முயற்சித்துள்ளார்.
இதனையடுத்து
பஸ்ஸை வழிமறித்து பெண் என கருதப்பட்ட நபரை பொலிஸ்நிலையத்துக்கு
அழைத்துவந்து விசாரணைக்கு உட்படுத்தி பர்தாவை அகற்றிப்
பார்த்தபோது குறித்த சந்தேகநபர் ஆண் என தெரியவந்துள்ளது.
விசாரணைகளின்போது,
சந்தேக நபர் தெரிவித்ததாவது, தனது மனைவி கம்பளையிலுள்ள தனியார்
நிறுவனமொன்றில் பணியாற்றி வருவதாகவும், அவர் பிறிதொரு நபருடன்
தொடர்பு வைத்துள்ளார் என்ற சந்தேகத்தில் அவரது நடவடிக்கைகளை
கண்காணித்து அவரை கையும் மெய்யுமாக பிடிப்பதற்காகவே இவ்வாறு
பர்தாவால் முகத்தை மூடிக்கொண்டு மாறுவேடத்தில் வந்ததாக பொலிஸாரிடம்
தெரிவித்துள்ளார்.
கைது
செய்யப்பட்ட நபர் கம்பளை, மயிலபிட்டிய பிரதேசத்தை
சேர்ந்தவராவார். விசாரணைகளின் பின்னர் சந்தேகநபரின் மனைவி பொலிஸ்
நிலையத்துக்கு வரவ ழைக்கப்பட்டு அவரிடம் வாக்குமூலம்
பெறப்பட்டிருந்தது.
இந்நிலையில்,
சம்பவம் தொடர்பில் கண்டி பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர்
உபாலி நாரங்பணாவ தலைமையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.
