கம்பளையில் இரண்டரை வயது முகம்மது சல்மான் கடத்தப்பட்டார்

 
 
 
கம்பளை நகரில் இரண்டரை வயது சிறுவனொருவன்  இனந்தெரியாத நபர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த சிறுவனின் உறவினரான  25 வயது இளைஞனொருவனும் காணாமல் போயுள்ளதால் குறித்த இளைஞரே சிறுவனைக் கடத்தியிருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

கடத்தப்பட்ட சிறுவனின் பெயர் முகம்மது சல்மான் எனவும் குறித்த இளைஞரின் பெயர் அஸாம் எனவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

கம்பளை நகரை அண்டிய கம்பளைவெல பகுதியில் வசிக்கும் வர்த்தகரொருவரின் மூன்று வயதுடைய மகனும் உறவினரான இளைஞனும் புதன் கிழமை மாலை முதல் காணாமல் போயுள்ளனர். 

இறுதியாக கிடைக்கப் பெற்ற தொலைபேசி அழைப்புக்கமைய கடத்தல்காரர்கள் சிறுவனின் பெற்றோரிடம் 30 இலட்சம் ரூபா பணத்தை கோரியுள்ளதாக அறிய முடிகிறது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.