பொலன்­ன­றுவை - ஓனே­கம முஸ்­லிம்­க­ளுக்கு அச்­சு­றுத்தல்


ARA.Fareel

பொலன்­ன­றுவை ஓனே­கம பகு­திக்கு நேற்று முன்­தினம் விஜயம் செய்த பொது­ப­ல­சேனா அமைப்பின் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் தலை­மை­யி­லான பௌத்த குரு­மாரும் மற்றும் பெரும்­பான்மை இனத்தைச் சேர்ந்த சிலரும் அப்­ப­கு­தியில் வசிக்கும் முஸ்­லிம்­களின் மாட்டுத் தொழு­வங்கள் மற்றும் கொட்­டில்­களைக் கழற்றி எறிந்­த­துடன் முஸ்­லிம்­க­ளையும், இஸ்­லாத்­தையும் அவ­தூ­றாகப் பேசி­ய­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இதன்­போது பிக்­குகள் முஸ்­லிம்கள் ஜல­கெ­லும்­மின்ன வன பாது­காப்பு பிர­தே­சத்தை ஆக்­கி­ர­மித்­துள்­ள­தாக குற்­றச்­சாட்­டி­ய­துடன் அங்­கி­ருந்து வெளி­யேற வேண்­டு­மெ­னவும் உத்­த­ர­விட்­டனர்.

இச் சம்­ப­வங்­களின் போது அவ்­வி­டத்­திற்கு பொலி­ஸாரும் சமு­க­ம­ளித்­தி­ருந்­தனர்.
இதே­வேளை, பௌத்த சைத்­திய நிர்­மா­ணத்­துக்குப் பயன்­ப­டுத்­தப்­பட்ட கற்­களை பயன்­ப­டுத்தி முஸ்­லிம்கள் மாட்டுத் தொழு­வத்தை நிர்­மா­ணித்­துள்­ள­தாக பொது­ப­ல­சே­னாவின் ஊடகப் பிரிவு தெரி­வித்­துள்­ளது.

சோமா­வதி வன பாது­காப்பு எல்­லையில் ஜல­கெ­லும்­மின்ன வன பாது­காப்பு பிர­தேசம் அமைந்­துள்­ள­தா­கவும், இப்­ப­கு­தியில் முஸ்­லிம்கள் சுமார் 2000 ஏக்கர் நிலத்தில் விவ­சாயம் மேற்­கொண்­டுள்­ள­தா­கவும் இதனால் அப்­ப­கு­தியில் இருந்த சுமார் 18 பௌத்த சைத்­தி­யங்கள் அழி­வுக்­குள்­ளா­கி­யுள்­ள­தா­கவும் பொது பல சேனாவின் ஊட­கப்­பி­ரிவு மேலும் தெரி­வித்­துள்­ளது.

முஸ்­லிம்கள் சுமார் 200 வரு­டங்­க­ளுக்கும் மேற்­பட்ட மருத மரங்­களை வெட்டி காடு­களை அழித்­துள்­ள­தா­கவும் அவ்­வ­மைப்பு குற்றம் சுமத்­தி­யுள்­ளது. முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான இந்த செயற்­பா­டு­களில் பொது­ப­ல­சேனா அமைப்பு, சிங்­கள ராவய, சிங்­கலே அபி அமைப்பு என்­ப­ன­வற்றின் குரு­மார்கள் கலந்து கொண்­டனர்.

இச்­சம்­ப­வத்தை அடுத்து அப்­ப­குதி முஸ்­லிம்கள் பீதி அடைந்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. வட மத்­திய மாகாண சபை உறுப்­பினர் எஸ்.எச்.எம்.அன்ஸார் நேற்று மாலை ஓனே­க­மைக்குச் சென்று மக்­களைச் சந்­தித்து விப­ரங்­களைத் திரட்­டி­யுள்­ள­துடன் இது தொடர்பில் லங்­கா­புர பொலிஸில் முறைப்­பாடு செய்­வ­தற்கும் ஏற்­பா­டு­களை மேற்கொண்டார்.

ஜாதிகபல சேனாவின் செயலாளர் வட்டரக்க விஜிததேரர் இச்சம்பவத்தை கண்டித்துள்ளதுடன் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் முன்பு குறிப்பிட்டது போன்று உத்தியோகப்பற்றற்ற பொலிஸாக செயற்படுவது மிகவும் ஆபத்தானது எனத் தெரிவித்துள்ளார்.