ARA.Fareel
பேரீச்சம்பழத்தின் விலையை அரசாங்கம் அதிகரிக்கவில்லை. பேரீச்சம் பழம் ஒரு கிலோவுக்கு தற்போது அமுலிலுள்ள 60 ரூபா வரி நீடிக்கப்பட்டுள்ளதேயன்றி புதியவரிகள் எதுவும் விதிக்கப்படவில்லை.
பேரீச்சம் பழத்துக்கான இறக்குமதி வரியை அரசாங்கம் அதிகரித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி (ஜே.வி.பி.) தவறான கருத்துகளைக் கூறி மக்களைத் தவறாக வழிநடத்தியுள்ளார் என பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் (ஐ.தே.க.) தெரிவித்தார்.
மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி அரசாங்கம் பேரீச்சம் பழத்துக்கு இறக்குமதி வரியை அதிகரித்துள்ளது என்று பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்
கடந்த 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை பேரீச்சம் பழத்தின் தரத்துக்கேற்ப இறக்குமதி வரி அறவிடப்பட்டது. ஆகக்குறைந்த தரத்தினையுடைய பேரீச்சம் பழம் கிலோவுக்கு 130 ரூபா வரி அறவிடப்பட்டது. பின்பு இந்த 130 ரூபா 60 ரூபாவாகக் குறைக்கப்பட்டது.
விஷேட வியாபார பண்ட அறவீட்டுச் சட்டத்தின் பிரகாரம் இந்த இறக்குமதி வரி அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட பின்பு ஒவ்வொரு 6 மாத காலத்துக்கும் நீடிக்கப்பட வேண்டும். ஆதலால் 6 மாதங்களுக்கு ஒரு முறை பாராளுமன்றத்தில் இதற்கான அங்கீகாரம் பெறப்படவேண்டும்.
விஷேட வியாபார பண்ட அறவீட்டுச் சட்டத்தின் மீதான பாராளுமன்ற விவாதத்தின் போது பேசிய பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தவறான கருத்துகளைக் கூறி மக்களை குறிப்பாக முஸ்லிம்களை தவறாக வழிநடத்தியுள்ளார். இது புதிதாக விதிக்கப்படும் வரி எனத் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இது தொடர்பில் மௌனமாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். முழு இலங்கை சமுதாயத்தையும் தவறாக வழிநடத்தியுள்ளார். இதுவே மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல். முஸ்லிம்களின் முக்கிய பிரச்சினைகளில் மௌனம் சாதிக்கும் மக்கள் விடுதலை முன்னணி பேரீச்சம் பழம் பற்றி பேசுகிறது.
வில்பத்து விவகாரம், இறக்காமத்தில் முஸ்லிம்களின் காணி சுவீகரிப்பு, சிலை நிறுவியமை, விகாரை அமைக்க முயற்சிக்கின்றமை எனும் விவகாரங்களில் மௌனம் சாதிக்கும் மக்கள் விடுதலை முன்னணி முஸ்லிம்களின் உரிமைகள் பற்றி சொல்லித்தரத் தேவையில்லை. அரசாங்கம் பேரீச்சம் பழ இறக்குமதி வரியில் எவ்வித மாற்றங்களையும் செய்யவில்லை என்றார்.